தமிழ்நாடு, பாப்புலிசம் மற்றும் ’போஸ்ட் ட்ரூத்’! – யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களும் தமிழ்ச் சமூகமும்!
’மார்ஸ் தமிழ்’ என்ற புதிய யூட்யூப் சேனல் மூலமாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ஒன்றை நடத்தி, அதில் தமிழக பாஜகவுக்கும் யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்களுக்கும் இடையிலான பேரங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றனர் மதன் ரவிச்சந்திரன் - வெண்பா கீதாயன் ஆகிய இருவர். இந்த இருவரின் கடந்த கால வரலாறும் அப்படியொன்றும் நேர்மையானது இல்லையென்ற போதிலும், அதனை வைத்து மட்டுமே இந்த மொத்த விவகாரத்தையும் அணுகிவிட முடியாது.
முதலாளிகளுக்கு மாமா வேலை செய்யும் பத்திரிகையாளர்கள்!
நீரா ராடியாவின் உரையாடற் பதிவுகள் இந்திய அரசியல் அரங்கில் காலம் காலமாக நிலவி வந்த தரகுத்தனத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அம்பலப்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம் முதலாளித்துவ ஊடகங்களின் உண்மையான மறுபக்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியது.