‘ரத்த சாட்சி’ – இடதுசாரி சாகசவாத நாயகனும், காவல்துறை அதிகாரியின் குற்றவுணர்வும்!

அராஜக பண்ணையார்களுக்கு எதிராக தொழிலாளர்களை கம்யூனிஸ்ட்கள் திரட்டுவது, நக்சலைட்கள் மீதான காவல்துறை அடக்குமுறை, நக்சலைட் ஒழிப்பில் எம்ஜிஆர் காட்டிய தீவிர முனைப்பு முதலான காட்சிகள் ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நேர்மையான காட்சியமைப்புகள். இதனைக் கழித்து பார்த்தால், இது மற்றொரு Woke Cinema Genreல் இடம்பெறும் திரைப்படமாகவே இருக்கிறது.

‘சுவாசிக்கும் அனைத்து உயிர்களுக்கும்!’ – ஆஸ்கர் தவறவிட்ட இந்தியப் பொக்கிஷம்!

சிறந்த ஆவணப்படப் பிரிவில் பரிந்துரையில் இருந்த ‘All That Breathes’ படம் இந்தியாவின் சமகால அரசியலை மறைமுகமாகப் பேசும் முக்கியமான படைப்பு. டெல்லியின் நகர்ப்புறமயமாக்கலால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள், காற்று மாசு முதலான பிரச்னைகள் பருந்துகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும், உடல் நலிவுற்று வானில் இருந்து விழும் பருந்துகளுக்கு சிகிச்சை அளிக்கும் மூன்று முஸ்லிம் சகோதரர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

மொய்தீன் பாய்: ரஜினியின் இந்து-முஸ்லிம் அரசியல்!

ரஜினி முஸ்லிமாக நடிப்பதைப் பற்றியும், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘பாட்ஷா’ என அவர் நடித்ததையும் ஒப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் ரஜினியின் மதச்சார்பற்ற முகத்தைப் பாராட்டியும் பதிவுகளைக் காண முடிந்தது. ரஜினியின் திரைப்படங்கள் உண்மையிலேயே மதச்சார்பற்ற அவரது அரசியலை வெளிப்படுத்துபவை. அதில் மறுப்பதற்கு இல்லை; அவரது ஆன்மிக அரசியலில் இஸ்லாமியர்களுக்கும் இடம் இருப்பதை அவர் எப்போதும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.