பெரும்பான்மைவாதத்துக்குப் பலியான விகடன்
ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.
‘யார் குற்றவாளி?’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்!
இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.
வெறுப்புப் பிரச்சாரம் செய்ததற்காக Zee News சுதிர் சவுத்ரி மீது வழக்கு
Zee news ஆசிரியர் சுதிர் சவுத்ரி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரள காவல் துறை.
`முல்க், ஆர்டிகிள் 15, தப்பட்!’ – பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் துணிச்சலும், போதாமையும்!
இந்திய சமூகத்தில் ஓர் இந்துவாக, உயர்சாதியைச் சேர்ந்தவராக, ஆணாக அனுபவ் சின்ஹா இயக்கிய திரைப்படங்கள் பாராட்டுக்குரியவை என்ற போதும், அவரது படைப்புகள் அவரது அடையாளங்களின் வழியான பார்வையில் வெளியாகி, அவரது அரசியலின் போதாமையையே வெளிபடுத்தியிருக்கின்றன.
`வரனே ஆவஷ்யமுண்டு’ – மலையாள சினிமாவின் பொறுப்பின்மையும் தமிழ் ட்ரோல்களின் எதிர்வினையும்!
மனித உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும், கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்காகவும் குரல்கொடுக்க முன்வராத தமிழ் ட்ரோல்களால் துல்கர் சல்மான் மீது எதிர்வினையாற்ற முடிந்தது. அவரை அடிபணிய வைக்க முடிந்தது.
திரைப் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வோடு அமையப் பெற வேண்டும்; அதே வேளையில், இணைய ட்ரோல்களின் செலக்டிவ் எதிர்வினையையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
கொரோனா: வீழ்ச்சியின் புதிய உச்சத்தை எட்டும் ஊடகத்துறை!
மற்ற எல்லா துறைகளைப் போலவும் ஊடகத்துறையும் கொரோனா விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகம் ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருந்தது. இப்போது அந்த வீழ்ச்சி ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
ஊரடங்கு: கோவில் பூசாரியை முஸ்லிம் எஸ்.பி தாக்கினாரா?
மத்திய பிரதேசத்தில் ஊரடங்கின்போது ஒரு கோவிலில் ராமநவமி அன்று தனியாக வழிபாடு செய்துவந்த பூசாரி உபேந்திர குமார் பாண்டே என்பவரை ரேவா எஸ்.பி ஆபித்கான் கொடூரமாகத் தாக்கினார் என்று.
ஜிப்ஸி: இஸ்லாமோ ஃபோபியாவின் சிபிஎம் வெர்ஷன்
பத்திரிகையாளராக இருந்து ’குக்கூ’ படத்தின் மூலம் திரைப்பட இயக்குநரானவர் ராஜு முருகன். தனது ’ஜோக்கர்’ படத்துக்காக தேசிய விருது வரை பெற்ற அவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள ’ஜிப்ஸி’ ஒரு...
அகதிகளை மனிதாய நீக்கம் செய்யும் இரு சொல்லாடல்கள்
செய்திகள் வெளியிடும்போது மையநீரோட்ட ஊடகங்கள் (குறிப்பாக வடமாநில ஊடகங்கள்) பலசமயங்களில் இந்து தேசியவாதிகள் உருவாக்கித் தரும் சொல்லாடல்களை அப்படியே கையாள்கின்றன. இதன் விளைவாக முக்கியமான விவகாரங்கள் பலவற்றை மக்கள் இந்துத்துவ கதையாடல்களின் வாயிலாக புரிந்துகொள்வதற்கு வழியமைத்துத் தரப்படுகின்றது.
‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பது இல்லையே, ஏன்?
உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை?