‘யார் குற்றவாளி?’ – ‘பாதாள் லோக்’ முன்வைக்கும் பகிரங்கமான கேள்வியும் ரகசியமான பதிலும்!

இந்தியா முழுவதும் ஒடுக்கப்படும் சமூகங்கள், அதிகார வர்க்கத்தில் under represented ஆக இருப்பதும், இதே சமூகங்கள் இந்திய சிறைச்சாலைகளில் over represented ஆக இருப்பதும் தற்செயலானவை அல்ல. இந்த உண்மையைக் கதைக்கருவாக்கி, அதன் மூலம் படைக்கப்பட்டிருக்கிறது ‘பாதாள் லோக்’.

ஹத்ராஸ் பாலியல் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படும் தவறான புகைப்படம் – உண்மையென்ன?

இளம் பெண் ஒருவர் கரும்புத் தோட்டத்தில் நிற்பது போன்ற அப்புகைப்படமானது பாதிக்கப்பட்ட பெண்ணின் படமில்லை எனத் தெரிய வந்துள்ளது. BOOM தளம் ஹத்ராஸ் பெண்ணின் சகோதரரிடம் அந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்தபோது, அது தனது தங்கையின் புகைப்படமில்லை எனவும் அப்படத்தில் உள்ளவரை தனக்குத் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

மொய்தீன் பாய்: ரஜினியின் இந்து-முஸ்லிம் அரசியல்!

ரஜினி முஸ்லிமாக நடிப்பதைப் பற்றியும், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ‘பாட்ஷா’ என அவர் நடித்ததையும் ஒப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் ரஜினியின் மதச்சார்பற்ற முகத்தைப் பாராட்டியும் பதிவுகளைக் காண முடிந்தது. ரஜினியின் திரைப்படங்கள் உண்மையிலேயே மதச்சார்பற்ற அவரது அரசியலை வெளிப்படுத்துபவை. அதில் மறுப்பதற்கு இல்லை; அவரது ஆன்மிக அரசியலில் இஸ்லாமியர்களுக்கும் இடம் இருப்பதை அவர் எப்போதும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.

ஊரடங்கு: கோவில் பூசாரியை முஸ்லிம் எஸ்.பி தாக்கினாரா?

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கின்போது ஒரு கோவிலில் ராமநவமி அன்று தனியாக வழிபாடு செய்துவந்த பூசாரி உபேந்திர குமார் பாண்டே என்பவரை ரேவா எஸ்.பி ஆபித்கான் கொடூரமாகத் தாக்கினார் என்று.

Forrest Gump Vs Laal Singh Chaddha… ஆதிக்கத்தின் அப்பாவித்தனமும், ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் வேறானவை!

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ அமெரிக்காவின் கலாச்சார, வரலாற்றைப் பதிவு செய்த டாப் 100 திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அதன் ரீமேக்கான ‘லால் சிங் சத்தா’ எப்படியிருக்கப் போகிறது என்ற ஆர்வம் எழுவது இயல்பு. ‘லால் சிங் சத்தா’ சீக்கியக் கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதாக அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டபோது, அந்த ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்காவின் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரின் கதை, இந்தியாவில் ரீமேக் செய்யப்படும்போது ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரின் கதையாக மாற்றப்பட்டிருக்கிறது.

‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பது இல்லையே, ஏன்?

உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை?

வசூல் ராஜா, The Body Snatcher படங்களும் மனித சடலங்களும்! – 19ம் நூற்றாண்டு மருத்துவத்தின் இருண்ட பக்கம்!

'வசூல்ராஜா' படத்தில் ஒரு காட்சி உண்டு. கமல் ஏதேதோ தகிடுதத்தம் செய்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்துவிடுகிறார். ஒரு நாள் பயிற்சி வகுப்பில் ஒரு சடலத்தைச் சுற்றி மாணவர்கள் அனைவரும் குழுமியிருப்பர். ஆசிரியர் அவ்வுடலை அறுத்து மாணவர்களுக்கு உடலின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி விளக்குவார். கூட்டத்தைத் தாண்டிப் பார்க்க முயலும் கமல் ’கூட்டமாக இருப்பதால் எதையும் பார்க்க முடியவில்லை’ என்று சொல்ல, உடனே ஆசிரியர் ‘உனக்கு வேணும்னா நீ தனி ஒரு பாடிய கொண்டு வந்துக்கோ’ என்று சொல்வார். கெத்தாக அந்த இடத்தை விட்டு நகரும் கமல் உடனே பிரபுவுக்கு ஃபோன் போட்டு தனக்கு ’ஃபெரஷ்’ஷாக ஒரு சடலம் வேண்டும் என்று கேட்பார்.

வெறுப்புப் பிரச்சாரம் செய்ததற்காக Zee News சுதிர் சவுத்ரி மீது வழக்கு

Zee news ஆசிரியர் சுதிர் சவுத்ரி மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரள காவல் துறை.

‘ரத்த சாட்சி’ – இடதுசாரி சாகசவாத நாயகனும், காவல்துறை அதிகாரியின் குற்றவுணர்வும்!

அராஜக பண்ணையார்களுக்கு எதிராக தொழிலாளர்களை கம்யூனிஸ்ட்கள் திரட்டுவது, நக்சலைட்கள் மீதான காவல்துறை அடக்குமுறை, நக்சலைட் ஒழிப்பில் எம்ஜிஆர் காட்டிய தீவிர முனைப்பு முதலான காட்சிகள் ‘ரத்த சாட்சி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நேர்மையான காட்சியமைப்புகள். இதனைக் கழித்து பார்த்தால், இது மற்றொரு Woke Cinema Genreல் இடம்பெறும் திரைப்படமாகவே இருக்கிறது.

பெரும்பான்மைவாதத்துக்குப் பலியான விகடன்

ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.