நகைச்சுவை – மற்றமையாக்கலின் மற்றொரு கருவி! – தமிழ் இணைய விவாதங்கள் குறித்து… – ர.முகமது இல்யாஸ்
Dank கலாச்சாரத்தின் மூலமாக நகைச்சுவை என்பதை மற்றமையாக்கலுக்கான கருவியாக வலதுசாரிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்துகின்றனர். இதில் நகைப்புக்கு உள்ளாக்கப்படுவோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள், பெண்கள், பால்புதுமையினர் ஆகியோராகவே இருக்கின்றனர். உலகம் முழுவதும் இணையத்தில் பிரபலமான இந்தக் கலாச்சாரத்தை வட இந்தியாவில் தலித்துகள், பழங்குடிகள், பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாகும் பெண்கள் முதலானோரை இழிவுபடுத்த பார்ப்பன, உயர்சாதி இளைஞர்கள் பயன்படுத்திவருகின்றனர்.
விஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை
தமிழில் தேவர் சாதிப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்துதான் வந்திருந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம்....
‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பது இல்லையே, ஏன்?
உயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா? அல்லது ஒடுக்கப்படுகிறார்களா? பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள்? ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை?
காலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்
சிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள்.
மோடியின் ராஜகுரு சோ ராமசாமி
சென்னை மயிலாப்பூர், தமிழக ராஜகுருக்களின் தலைநகரம். பாரதியோ இல்லை ஆழ்வார்பேட்டை ஆண்டவனோ, போயஸ் தோட்டத்து பெருந்தலைகளோ, ஊடக குழுமங்களின் அதிபர்களோ அனைவரும் சங்கமித்திருக்கும் புண்ணிய பூமி.
கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்
பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.
இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?
கல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லாத் துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண்...
தி இந்து: போயஸ் தோட்டத்தின் மீடியா பூசாரி
தமிழ்ப் படங்களில் பட்டாபட்டி வேட்டி கட்டிய கிரிமினல்கள் அளவுக்கு, கோட்டு சூட்டு கிரிமினல்களை பார்க்க முடியாது. ஆள் பாதி ஆடை பாதி எனும் இமேஜை மூலதனமாகக் கொண்டே இன்றைய கிரிமினல்கள் ‘தொழில்’ செய்கிறார்கள். கோட்டு சூட்டு உளவியலை சாதகமாக பயன்படுத்தியே தமிழ் இந்து தினசரி தனது சந்தர்ப்பவாதத்தை வணிகம் செய்கிறது. இருப்பினும் எந்த ஒரு குற்றவாளியும் குற்றச் செயல் செய்யும் போது கண்டிப்பாக தடயங்களை மறந்து விட்டே செல்கிறான். அவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்.
2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது. ஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை.
சிதம்பரம் கோவில் – உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஊடக அவதானிப்பும்
நமக்கு எழும் கேள்வி ரூ.304 கோடி வாடகை வசூலிக்கவேண்டிய அரசு நிர்வாகம் லஞ்ச சீர்கேட்டில் சிக்கி வெறும் ரூ. 36 கோடிதான் வசூலிக்கிறது என சுட்டிக்காட்டும் சு.சாமி, சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் நிர்வாகத்தில் இருந்தபோது கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.37,000 என தாக்கல் செய்த நிலையில் அது அரசு நிர்வாகத்திற்கு சென்ற பிறகு ஒரு கோடியைத் தாண்டியது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?